தொழில் நிறுவனம், கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்றுங்கள் : தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிரடி

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொழில் நிறுவனம், கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்றுமாறு தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழகத்திலும் நாளொன்றுக்கு 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலைமை தொடருமானால் வட மாநிலங்களை போலவே தமிழகத்திலும் இட பற்றாக்குறை சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்தநிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கூறியதாவது : கொரோனா கவனிப்பு மையங்களின் எண்ணிக்கையை கடந்த ஆண்டைவிட கூடுதலாக உயர்த்த வேண்டும். ஏற்கனவே, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகளை கொரோனா மையங்களாக மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Read more – மேற்கு வங்கத்தில் நேரடி தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை… ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று…

மேலும், கொரோனா கவனிப்பு மையங்களை பராமரிக்க முதற்கட்டமாக 61 கோடி ரூபாய் நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும், அனைத்து கொரோனா கவனிப்பு மையங்களை மாவட்ட ஆட்சியர்கள் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version