கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா- சூரசம்ஹாரம் காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா வரும் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. முக்கிய நிகழ்வான கொடியேற்றம் காப்பு கட்டுதல் சூரசம்ஹாரம் போன்றவைகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசை தசரா திருவிழா ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இதற்காக பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து வேடமிட்டு ஊர் ஊராக சென்று காணிக்கை எடுத்து பத்தாவது நாள் சூரசம்ஹாரம் அன்று கோவிலில் தங்குவார்கள்.

இதற்காக உலகமெங்கும் கோடிக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவார்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தினால் தசரா திருவிழா நடைபெறாது என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது பல கட்டுப்பாட்டு விதிகளுடன் தசரா திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி,

1.கொடியேற்றத்திற்கு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை

2.தினசரி 8000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

3.இத்தனை ஆண்டுகளாக பொது மக்கள் மத்தியில் குலசை கடற்கரையில் பொது மக்களுக்கு மத்தியில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வு, இந்த ஆண்டு பரிகார மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் சூரசம்ஹார நிகழ்வுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

4.பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்களை பெற்று கொள்ளலாம்.

5.அந்தந்த ஊரை சேர்ந்த நிர்வாகிகள் கொடியேற்றத்தில் கலந்து கொண்டு தங்கள் குழுவை சேர்ந்தவர்களுக்கு காப்புக்களை பெற்று கொள்ளலாம்.

6.பக்தர்கள் காணிக்கை பெற பக்கத்து ஊர்களுக்கு செல்ல அனுமதி இல்லை.

7.பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை.

Exit mobile version