லஞ்சம் கேட்டதால் ஆட்டோவுக்கு தீ வைத்தவர் புதிய ஆட்டோ வாங்க உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி அளித்தார்!!

சென்னையில் வாகன காப்பீட்டுத் தொகை கட்ட முடியாததால் மன உளைச்சலில் தனது ஆட்டோவையே எரித்த ஓட்டுநருக்கு புதிய ஆட்டோ வாங்க திமுகவின் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி அளித்தார்

ஆட்டோ ஓட்டுனர் தாண்டவமுத்து என்பவர் தனது ஆட்டோ உரிமத்தை புதுப்பிப்பதற்காக சென்னை அண்ணாநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு பலமுறை சென்றுள்ளார்.ஆனால் அவரிடமிருந்து லஞ்சம் வாங்குவதற்காக அதிகாரிகள் பலமுறை அலைக்கழித்துள்ளனர்.விரக்தியில் அண்ணாநகர் அலுவலகத்திலேயே ஆட்டோ மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார். அதே பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றார். ஆனால் அங்கிருந்த போலீசார் அவரை காப்பாற்றினர்.இந்த செய்தி நேற்று முதல் தீயாய் பரவியது. இதைக் கேள்விப்பட்டு திமுக இளைஞர் அணியின் சார்பில் தாண்ட முத்துவுக்கு புதிய ஆட்டோ வாங்க உதயநிதி ஸ்டாலின் இன்று நிதி உதவி அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“டிரைவர் தாண்டவமுத்து பேசும்போது”, எனக்கு 45 வயசாகுது இதுவரைக்கும் யார்கிட்டயும் கைநீட்டி நின்னதில்ல. இந்த அதிகாரிங்க என்னைய கையேந்த வெச்சுட்டாங்க என்று தேம்பி அழுதார்.

இதைப்பற்றி “உதயநிதி” அவரது முகநூல் பக்கத்தில்  பதித்துள்ளது பின்வருமாறு:

வருமானமில்ல இன்சூரன்ஸ் கட்டமுடியல, கும்புடுறேன் ஆட்டோவுக்கு FC குடுங்கயா என்ற தாண்டமுத்துவின் வலி RTOக்கு புரியவே இல்லை. அலைக்கழிப்பு விரக்தியில் தன் ஆட்டோவுக்கு தானே தீவைத்தார். அவருக்கு தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இளைஞரணி சார்பில் புதியஆட்டோ வாங்க நிதியுதவி செய்தேன்.

தாண்டமுத்துவுக்கு உதவியது மன நிம்மதியளிக்கிறது. ஆனால், தமிழகம்முழுவதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து லட்சக்கணக்கான தாண்டமுத்துக்கள் தவிக்கின்றனர். உதவவேண்டிய அரசோ அவர்களுக்கு தொல்லைகொடுத்து வருவது கண்டிக்கத்தக்கது.

அண்ணன்கள் திரு.தயாநிதி மாறன் MP, திரு.சேகர்பாபு MLA மற்றும் திரு.ரங்கநாதன் MLA ஆகியோருக்கு நன்றி.

Exit mobile version