அ.தி.மு.க அரசு நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை-உதயநிதி ஸ்டாலின்

நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அ.தி.மு.க அரசு அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை:

நீட் தேர்வு அச்சத்தால் நேற்று மதுரையில் 19 வயது மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போய்விடுமோ என்ற அச்ச உணர்வு அவரை தற்கொலைக்கு தூண்டியுள்ளது. இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், உயிரிழந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா குடும்பத்தினரை தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தி.மு.க சார்பில் மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.தொடக்கம் முதலே நீட் தேர்வை தி.மு.க எதிர்த்து வருவதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்ய அ.தி.மு.க அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.மேலும் இன்னும் 8 மாதத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version