தமிழகத்தில் கொரோனா நோயின் பரவல் அதிகமாக உள்ளது கொரோனா நோய் சாமானியன் முதல் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர் .

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர், செய்தியாளர்கள் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி.யுமான வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உறுதியான நிலையில் இருவரும் சென்னையிலுள்ளதனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதியானநிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிட தக்கது.