உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்கள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்ட கருத்துக்கள் பின்வருமாறு:
அரக்கனே யோகி ஆதித்யநாத்தே பதவி விலகு, தலித் மற்றும் பெண்கள் விரோத சனாதன அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.
தனது ட்விட்டர் பதிவில், ”உத்தரப் பிரதேச முதல்வரே பதவி விலகு; இந்த மாநிலத்தில் மட்டும் 2019ல் தலித்கள் மீது 11829 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. ”சனாதன அரக்கனே யோகி ஆதித்யநாத்தே பதவி விலகு”, ”தலித்களுக்கும், பெண்களுக்கும் எதிரான வன்கொடுமைகள்”, ”மோடி அரசே, யோகி அரசே, சாதிவெறி, மதவெறி, ஆணாதிக்க வெறி ஆகியவற்றின் ஊற்றுக்கண் சனாதன வெறியை கை விடு” மோடி அரசே, யோகி அரசே சனாதன வெறியை பரப்பாதே, தலித்களையும், பெண்களையும் வதைக்காதே” என்னும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.