தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும்,நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடக்கிறது.
இதனால், நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜன் சிலிண்டர், வென்டிலேடர்கள் இல்லாமல் நோயாளிகளுக்கு வழங்க முடியாமல் மருத்துவமனை நிர்வாகம் தவித்து வருகிறது.
இந்தநிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்கும் வசதிகள் உள்ளது என்றும், எனவே இடை தற்காலிகமாக ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளுக்காக ஆலை இயங்க அனுமதிக்க வேண்டும் வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
Read more – சென்னையில் தனியார் கோவிட் சென்டர்கள் தொடங்க அனுமதி – மாநகராட்சி ஆணையர்
மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரித்து அதை இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டுமென மனுவில் கேட்டு கொண்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தமிழக முதலமைச்சருக்கும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய கையோடு உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.