கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வெறி நாய் கடித்து குழந்தைகள் உட்பட 80 பேர் படுகாயம், தொடர் வெறிநாயின் தொல்லையாக கிராம மக்கள் பீதி …
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சந்தூர் என்ற இந்தகிராமத்தில் மாலை நேரத்தில் தீடிரென புகுந்த வெறிநாய் கண்ணில் பட்ட குழந்தைகள் முதல் பெரிய வர்களை விரட்டி ,விரட்டி கடித்ததில் படுகாயம் மடைந்தவர்களை கிராம மக்கள் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவ மனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்தனர்.
பின்னர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடித்து விடடு தப்பி சென்ற வெறிநாயை பிடிக்க கிராம மக்கள் பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை,
மேலும் தீடிரென மாலை நேரத்தில் கிராமத்திற்குள் புகுந்த வெறிநாய் கால்நடைகள் மற்றுமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 80-க்கு மேற்பட்டவர்களை கடித்து விட்டு அங்கு இருந்து தப்பி சென்றுள்ளது,
பொது மக்களை விட்டி விரட்டி கடித்த இந்த வெறிநாயை சம்மந்தபட்டவர்கள் பிடிக்க வேண்டும் இல்லையில் சுட்டாவது அந்த நாயை சாகடிக்கப்பட வேண்டும், இதேபோல கடந்த இண்டு மாதங்களுக்கு முன்பு பலர் வெறிநாய் கடிக்கு ஆளாகி உள்ளனர். மேலும் காட்டகரம் ஊராட்சிக்கு உட்பட சந்துர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே சந்தூரில் கொரோணா தாக்கல் அதிகரித்துள்ள நிலையில் வெறிநாய் கடித்து 80-க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.