விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? மகன் விஜயபிரபாகரன் விளக்கம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? என்று அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
vijay pirabakaran

சென்னை:

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியிலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அவரது மகன் விஜயபிரபாகரன் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:-

தயவுசெய்து வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உடல்நிலை மோசமடைந்து அப்பா மருத்துவமனைக்குச் செல்லவில்லை. அப்பா நன்றாக இருக்கிறார். ஏற்கனவே மருத்துவமனை போய்விட்டு வந்ததற்காக, வழக்கமான செக்-அப் செய்து கொள்வதற்காக அப்பா சென்றுள்ளார்.
அதற்குள் அனைத்து மீடியாவிலும் உடல்நிலை சரியில்லை என்று போட்டு வருகிறார்கள். அப்பாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்களுடைய குடும்பத்திற்கு ஒரு சின்ன சுதந்திரம், தனியுரிமை இல்லாமல் அனைத்தையும் செய்தியாக்கி விடுகிறீர்கள்.

தொடர் பரிசோதனை:

எத்தனையோ மக்கள் கேப்டன் மீது அன்பாகவும், பாசமாகவும் இருக்கிறார்கள். அப்பா நாளைக்கு வீட்டுக்கு வந்துவிடுவார். இதுவொரு சின்ன விஷயம். கரோனா என்ற பெரிய வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது. அதனால், கவனமாக இருப்பதற்காக அடிக்கடி பரிசோதனை செய்வோம்.
இன்னும் 2-3 முறை கூட போய் பரிசோதனை செய்வோம். பலருமே எனக்கு தொலைபேசியில் அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான் உடனடியாக ஃபேஸ்புக் லைவ்வில் வந்து பேசுகிறேன்.

நலமாக உள்ளார்:

வழக்கமான பரிசோதனைக்காக அப்பா மருத்துவமனை சென்றுள்ளார். அடிக்கடி இதே மாதிரி செக்கப் செய்து கொள்வதற்காகச் செல்வோம். அனைத்தையும். கேப்டனுக்கு ஒன்றும் ஆகாது. சூப்பராக இருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Exit mobile version