விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தது காட்டுமிராண்டித்தனம் : கனிமொழி எம்.பி. கண்டனம்

விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தது காட்டுமிராண்டித்தனம் என்று கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
DMK Kanimozhi

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருந்தார். அவர் அத்திரைப்படத்தில் நடிக்கக்கூடாது என்று பல தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்தக் கோரிக்கை வலுப்பெற்றதை தொடர்ந்து, முத்தையா முரளிதரனே இத்திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக்கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். விஜய் சேதுபதியும் விலகுவதாக அறிவித்தார். இந்த சூழலில், விஜய் சேதுபதி மகளுக்கு டுவிட்டர் மூலமாக பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதைச் செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version