அப்பாவின் கனவை நிறைவேற்றுவேன் : கன்னியாகுமரி தொகுதியில் விருப்பமனு அளித்த விஜய் வசந்த் பேட்டி

கன்னியாகுமரி தொகுதியில் அப்பாவின் கனவை நினைவாக்குவேன் என்று விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி :

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலும் அதே நாளில் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் விருப்பமனு தாக்கல் தாக்கல் செய்தார்.

Read more – மார்ச் 8 ம் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் : திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவு

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து விஜய் வசந்த் கூறியதாவது, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்பு மிகவும் நன்றாக இருப்பதாகவும், தந்தையின் கனவை நிஜமாக்குவதே தன்னுடைய கடமை என்பதால் வாய்ப்பு கேட்டு விருப்பமனு அளித்தாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version