தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்த கருத்துகள் வரவேற்பு: தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு அறிவிப்பு

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்து தொண்டர்களும், மக்களும் கருத்து தெரிவிக்கலாம் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கை குழு தெரிவித்துள்ளது.

சென்னை:

தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் எட்டு பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று தேர்தல் அறிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேர்தல் அறிக்கை தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர், டி.ஆர்.பாலு இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கருத்துக்களுக்கு வரவேற்பு :

2021 சட்டசபை பொதுத் தேர்தலையொட்டி தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினரிடம் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய பொது அம்சங்கள் குறித்தும் – தங்கள் மாவட்டத்தில் பிரச்சினைகள் குறித்தும் இடம்பெற வேண்டிய சாரம்சங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க விரும்பும் கட்சி நிர்வாகிகள் – கட்சித் தொண்டர்கள் தலைமைக்கு அனுப்பி வைக்கலாம்.

அத்துடன், மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க விரும்புவோர் “ manifesto2021@dmk.in ” என்ற மின்னஞ்சல் (email id) முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version