ரஜினிகாந்தின் முடிவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்:அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

நடிகர் ரஜினிகாந்தின் முடிவை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை:

நடிகர் ரஜினிகாந்தின் முடிவை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-தமிழகம் பல்வேறு தேசிய விருதுகளை பெற்றுள்ளது. இந்திய டுடே ஆய்வில் தமிழக முதலமைச்சர் நல்ல நிர்வாகம் வழங்குகிறார் என தெரிவித்து உள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் 18 சதவீதமாக இருந்தது. தற்போது 0.5 சதவீதம் தான் உள்ளது.

280 நோயாளிகள்தான் தற்போது கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் தற்போது ஒருவர் கூட இல்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தான் சிகிச்சையில் உள்ளனர்.150 நாட்களில் சுமார் 15 லட்சம் உணவு, சத்தான பானங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தி.மு.க. ஓட்டு வாங்குதற்காக வேண்டும் என்றால், அ.தி.மு.க. அரசை பற்றி குறை கூறலாம். தி.மு.க.வின் உள் நோக்கம் எடுபடாது. அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுகிறது. கனிமொழி, எடப்பாடியில் அல்ல விண்வெளியில் பிரசாரத்தை தொடங்கினாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது. ரஜினிகாந்த் நல்லவர். ரஜினிகாந்தின் முடிவை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version