இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுதாத மாணவர்களின் நிலை என்ன?

அண்ணா பல்கலைகழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுதாத மாணவர்களின் நிலை குறித்து அண்ணா பல்கலைகழகம் முடிவு செய்துள்ளது.

சென்னை:

இறுதி செமஸ்டர் தேர்வு:

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான வகுப்புகள் இணையவழியில் ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கி நடைபெற்றன. மேலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி முடிவடைந்தது. தேர்வுகள் இணைய வழியில் ஒரு மணி நேரம் நடத்தப்பட்டு, செயற்கை நுண்ணறிவு முறையில் கண்காணிக்கப்பட்டது.

இந்த நிலையில் பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வைச் சில மாணவர்கள் முறையாக எழுதவில்லை என்று புகார் எழுந்தது. அத்தகைய மாணவர்களின் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் திரட்டியுள்ளது.

எழுதாத மாணவர்கள்:

முறையான விதிமுறைகளைப் பின்பற்றித் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் வழங்கப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்படாது என்று அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளன. இந்த வார இறுதியில் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version