புகார்தாரர்களை காவல் ஆணையர் வீடியோ கால் மூலம் தொடர்பு கொள்ளும் சேவை !!

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள், பொதுமக்கள் தங்கள் குறைகளை வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வழியாக தெரிவிக்கும் முறையை கடந்த 03.07.2020 முதல் அறிமுகப்படுத்தி கேட்டறிந்து வந்தார்கள்.

இந்த நடைமுறை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையறிந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், சென்னை பெருநகரில் உள்ள அனைத்து காவல் மாவட்டங்களுக்கும் இந்த நடைமுறையை விரிவுபடுத்த உத்தரவிட்டதன்பேரில், (27.07.2020) அன்று முதல் இந்த நடைமுறையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சென்னையில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தி அதற்கான அலைபேசி எண்களையும் அறிவித்தார்கள்.

கொரோனா காலத்தில் வெளியூர் சென்று வந்துள்ள அனைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மீண்டும் இவ்வசதியின் விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகளை சுருக்கமாக வாட்ஸ் அப் தகவல் வழியாக ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 63691 00100 என்ற எண்ணில் அனுப்பலாம். அக்குறைகளை ஆராய்ந்த பின்னர் தேவைப்படும் புகார்தாரர்களை காவல் ஆணையாளர் அவர்கள் வீடியோ கால் மூலம் நேரடியாகத் தொடர்பு கொள்வார். பிற சாதாரண குறைகள் சம்பந்தப்பட்ட புகார்கள் சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையாளர்களுக்கு மேல் நடவடிக்கை எடுக்க அனுப்பப்படும்.

Exit mobile version