தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பின்னரே அனைத்துத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்திய பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரொனாவின் தாக்கம் அதிகரித்துவந்ததன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் செயல்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி தற்போது தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது. இந்த சூழலில் தான் பள்ளிகள் திறப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு தவறான தகவல்கள் பரவிவருகின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்த பின்னரே அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை முதலில் நடத்துவார். அதனைத் தொடர்ந்து தான் பள்ளிகள் குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.