ரயில்வே பணிகளில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு தெற்கு ரெயில்வே விளக்கம் தந்துள்ளது.
சில நாட்களுக்கு முன் திருச்சியிலுள்ள பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலை காலியாக இருந்த மொத்தம் 503 பணியாளர்கள் பதவிக்கு தமிழகத்திலிருந்து 4 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள அனைத்து வேலைகளுக்கும் வடமாநிலத்தவர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். கொரோனா ஊரடங்கு காலத்திலும், அவர்கள் பல்வேறு இடங்களில் இருந்து திருச்சிக்கு வந்து வேலை தொடர்பான ஆவன சரிபார்ப்பில் கலந்துகொண்டு பணி நிமித்தம் பெற்றது தமிழகத்தில் பெரிய கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கும் வண்ணம் தெற்கு ரயில்வே இது தொடர்பாக ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டு இருக்கிறது அதில் பின்வருமாறு ;
ரெயில்வே பணியாளர் தேர்வாணையம் என்பது ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தனி வாரியம்.இது சென்னை மட்டுமின்றி அகமதாபாத் ,திருவனந்தபுரம், பெங்களூரு ,மற்றும் மொத்தம் 27 இடங்களில் செயல்படுகின்றது.இந்த தேர்வாணையத்தை பொருத்தவரை பொது அறிவிப்பின் மூலமே அனைத்து மண்டல ரயில்வே மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது. இதிலுள்ள 21 இடங்களில் ஏதாவது ஒன்றுக்கு நாம் விண்ணப்பிக்க முடியும் அப்படி விண்ணப்பிக்கும் பட்சத்தில் ஒருவர் திருச்சி ,சென்னை, அல்லது சேலம், போல் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் தேர்வு செய்ய வேண்டும் அப்படித் தேர்வு செய்தபின் வேறு எந்த வாரியத்திற்கும் அவரால் விண்ணப்பிக்க இயலாது
ரெயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்.ஆர்.பி.) இந்தவகையான தேர்வை எந்த ஒளிவுமறைவும் இன்றி நடத்தி வருகிறது. தற்போது ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பங்கள் தரப்படுகிறது, தேர்வுகளும் கணினி மூலமாகவே நடத்தப்படுகிறது. தகுதி அடிப்படையிலேயே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். கணினி வழியாக தமிழ் உள்பட சுமார் 15 மொழிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.எனவே காலி பணியிடங்களுக்கு, தனிப்பட்ட ஒரு மாநிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நடத்தப்படும் தேர்வு இது கிடையாது. தமிழ்நாட்டை சேர்ந்த பிரதிநிதிகள் சென்னைக்கு மட்டுமல்லாமல், வேறு ஆர்.ஆர்.பி. வாரியத்திற்கும்விண்ணப்பித்து உள்ளார்கள். எடுத்துக்காட்டாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் 2.2 லட்சம் பேர் தமிழ்நாடு மட்டுமின்றி தென் மேற்கு ரெயில்வேயில் உள்ள ஆர்.ஆர்.பி. பெங்களூருக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
அதேபோல் அப்ரண்டிஸ் பயிற்சி நடத்துவது என்பது பணிமனை மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் பயிற்சி வழங்குவதற்காக மட்டுமே உருவாக்கியுள்ள ஒன்று. இதனை முடித்தவர்களுக்கு வேலை உறுதி செய்யப்படும் என்கிற நிலை எப்போதும் ரெயில்வேயில் கிடையாது. அவனாலும் கடந்த 2016-ம் ஆண்டு ரெயில்வே வாரியம்,சுமார் 20 சதவீத அப்ரண்டிஸ்களை முதல் நிலை பணிகளுக்கு தேர்வு செய்து கொள்ளுங்கள் என ஒப்புதல் அளித்துள்ளது இதன் அடிப்படையில் மொத்தம் 597 பணியிடங்கள் அப்ரண்டிஸ்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டது.இதில் மொத்தம் 3,627 விண்ணப்பங்கள் அப்ரண்டிஸ்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதில் 2,839 பேர் தேர்வுகளை எழுதி உள்ளனர். அவர்களில் 272 பேர் உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்றனர். இறுதியில் 54 பேர் மட்டும் அவர்களின் தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி பெற்றார்கள்
சென்ற2018-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி அன்று ‘லோகோ பைலட்டுகள்’ மற்றும் ‘டெக்னீஷியன்கள்’ பணியிடங்களுக்கான அறிவிப்பு எப்போதும் போலவே 21 வாரியங்களுக்கு பொதுவான அறிவிப்பாகவே வெளியிடப்பட்டது.
லோகோ பைலட்டுகளுக்கான பணிக்கு கல்வித் தகுதியாகஐ.டி.ஐ., டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டப்படிப்பு இருக்க வேண்டும். ஆனால் டெக்னீசியன்களுக்கு அப்படி இருக்க அவசியமில்லை ஐ.டி.ஐ படிப்பு இருந்தாலே போதும். பொறியியல் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள் ‘டெக்னீசியன்’ பணியிடங்களுக்கு ஏற்றவர்கள் அல்ல.
அதன் அடிப்படையில் சென்னை ஐ.சி.எப். மற்றும் திருச்சி பொன்மலை பணிமனை உள்பட காலி பணியிடங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து 51 சதவீதம் பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள் என்பதை சென்னை வாரியம் தெரிவித்துள்ளது. மொத்தம் 3,218 விண்ணப்பதாரர்கள் துணை ‘லோகோ பைலட்டுகள்’ மற்றும் ‘டெக்னீசியன்’ பணிகளுக்காக மட்டும் தேர்வு செய்யப்பட்டார்கள். இதில் சுமார் 17 சதவீதம் பேர் தமிழகத்தில் இருந்துதான்தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
நாம் ஏற்கனவே கூறியது போல் டிப்ளமோ மற்றும் என்ஜீனியரிங் பட்டப்படிப்பு முடித்தவர்கள் தகுதி பெறாததற்கு காரணம், ஐ.டி.ஐ. படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே ‘டெக்னீசியன்’ வேலைக்கு தகுதியானவர் என்ற நிலைதான்.ஆனாலும் அதே நேரத்தில், தமிழகத்தில் இருந்து 53 சதவீதம் பேர் துணை ‘லோகோ பைலட்டுகள்’ வேலைகளுக்குதேர்வாகி இருக்கிறார்கள். தெற்கு ரெயில்வேயின் பணியாளர் நலப்பிரிவு துறையின் அனைத்து உரிய செயல்முறை மேற்கொண்டதற்கு பின்னரே 541 பேர் திருச்சி பொன்மலை பணிமனையின் தற்போது டெக்னீசியன் பணியிடங்களுக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.