தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோனை!

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதியோடு 6 ஆம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள மேலும் ஊரடங்கு நீட்டிப்பதா? இல்லையா என்பது குறித்து ஜூலை 30 அன்று மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தீவிரம் அதிகரித்துவரும் நிலையில் 6ஆம் கட்ட ஊரடங்கினை ஜூலை 31 ஆம் தேதி வரை அமல்படுத்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.

மேலும் இந்த ஊரடங்கில் கடைகள் போன்ற வணிக நிறுவனங்கள் செயல்பட பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டது. அதோடு மண்டலத்திற்கு இடையேயான பொதுப்போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இருந்த போதும் கொரோனாவின் தீவிரம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தினை அடைந்துவருகிறது.

எனவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? மாவட்டத்திற்குள் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தவுள்ளார். இதனையடுத்து நாளை மறுநாள் அதாவது ஜூலை 30 ஆம் தேதி மருத்துவக்குழுவுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது மருத்துவக்குழுவின் பரிந்துரையின் பேரில் தான் தமிழக அரசு முடிவுகளை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version