சாலை விபத்துதொடர்ந்து முதலிடத்தில் தமிழகம்!!

சாலையில் ஏற்படும் விபத்துகளில்  தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது  இதற்கு  படுமோசமான சாலைகளே முக்கிய காரணம்  என தெரிவிக்கப்படுகிறது.தற்போது இந்தியாவில்  தொடர்ச்சியாக கடந்த மூன்று  வருடங்களாக சாலை விபத்து எண்ணிக்கையில் முதலிடத்தில்  தமிழ்நாடு பிடித்துள்ளது.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகச் சாலை விபத்தில் முதலிடம் பிடித்து  வரும் தமிழ்நாடு  கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் 57,228 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைத்  அடுத்து  மத்திய பிரதேசம் இரண்டாம் இடத்தில் 51,641 சாலை விபத்து  பதிவாகி உள்ளது.  இதில்மூன்றாம் இடத்தில் கர்நாடகா 40,644 எனும் எண்ணிக்கையில்  விபத்து நடந்துள்ளது.

சென்ற  2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 63,920 சாலை விபத்துகள்  ஏற்பட்டுள்ளன.

NCBR  அறிக்கை இன் தகவல் படி தமிழகத்தில் 57,228 சாலை விபத்துகள்  ஏற்பட்டுள்ளன, இவற்றின் மூலம்  சுமார் 10,525 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இதேபோல், மத்திய பிரதேசத்தில் 51,641 விபத்துகளில் 11,856 பேர்  இறந்துள்ளனர்.   இதே நேரத்தில், கர்நாடகாவிலும் 40,644 சாலை விபத்துக்கள்  எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது; அவற்றின் மூலம் 10,951 பேர் உயிரிழந்துள்ளனர்.

சாலை விபத்துகளில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழகம் –  படு மோசமான சாலைகளே முக்கிய காரணம்..

 பெரும்பாலும்  இதுபோன்ற  விபத்துகளுக்கு சாலை விதிகளை மீறுவதும், இருசக்கர வாகனத்தில் செல்வோர் செல்போனில் பேசிக்கொண்டு செல்வதும், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல்  இருப்பதும், குடி போதையில் வாகனங்கள் ஓட்டுவதும் முக்கிய நிகழ்வுகளாக உள்ளது.

 இதனை தவிர்த்து  தவிர்த்து மோசமான சாலைகளாலும், இரவு நேரத்தில்  சாலை விளக்குகள் சரிவர எரியாததாலும்,நெடுஞ்சாலைகளில் உள்ள அபாய பகுதிகளை  உடனே கண்டறிந்து சரி செய்யாமல் இருப்பதாலும்  சுமார் ஆயிரக்கணக்கான சாலை விபத்துகள் நிகழ்வதாக  நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

Exit mobile version