தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், ஆங்காங்கே தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்திற்கு அடுத்த 2 நாள்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுவதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வட கடலோர மாவங்களில் இன்றும், நாளையும் கனமழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் அலர்ட் என்றால் என்ன?
- குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும் கனமழை இருக்கும். மற்ற இடங்களில் எல்லாம் மிதமான மழை இருக்கும்.
- தாழ்வான இடங்களில் தண்ணீர் வர வாய்ப்பு இருப்பதால், அந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.