கள்ளக்குறிச்சியில் சிறுமியை கத்தியால் குத்தி விட்டு இளைஞன் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் சிறுமியை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய இளைஞன் தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்தவர் கோவிந்தன் இவர் சென்னையை அடுத்துள்ள சேலையூரில் குடும்பத்துடன் தங்கி பணி புரிந்து வந்துள்ளார். அப்போது அவருடைய 16 வயது மகள் வேளச்சேரி தேவாலயத்தில் பணிபுரிந்த சதீஷ் என்பவரை காதலித்து உள்ளார். விஷயம் இரண்டு வீட்டாருக்கும் தெரிய வந்து அந்த ஊர் பஞ்சாயத்தினர் முன்னிலையில் பேசி தீர்த்துள்ளனர் இருப்பினும் இருவரும் தொலைபேசியில் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் கோவிந்தன் கொரோனா காரணமாக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது சதீஷுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயம் ஆகி உள்ளது. இதனை அறிந்த அந்த சிறுமி சதீஷிடம் தன்னை வந்து சந்திக்குமாறு அழைத்துள்ளார், சதீஷ் தனது இரு சக்கர வாகனத்தில் சின்ன சேலம் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் வந்துள்ள நிலையில் சதீஷ் அவர் வைத்திருந்த கத்தியால் சிறுமியை குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார்.

சிறுமியை மீட்டு போலீசார் மருத்துமனையில் அனுமதித்த நிலையில், அவர் உயிர் பிழைத்தார். தப்பியோடிய சதீஷை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சதீஷ், சேலம் உடையாப்பட்டி பைபாஸ் அருகே மரங்கள் அடர்ந்த புதரில் நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய அம்மாபேட்டை போலீசார், இறப்பதற்கு முன் சதீஷ் எழுதிவைத்த கடிதத்தை பறிமுதல் செய்தனர். அதில், சிறுமி தனக்கு டார்ச்சர் கொடுத்ததாகவும், இதனால் மனமுடைந்து அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், போலீசார் தன்னை தேடுவதால் தற்கொலை செய்துகொள்வதாகவும் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version