திமுக vs அதிமுக முக்கிய வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதும் தொகுதிகள் எது ?

அதிமுக மற்றும் திமுகவின் முக்கிய வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதும் தொகுதிகள் குறித்து ஒரு பார்வை

சென்னை :

அறிஞர் அண்ணா மறைவிற்கு பிறகு எம்.ஜி.ஆர் முயற்சியில் 1972 ல் உருவான அதிமுக நேரடியாக திமுகவை எதிர்த்து போட்டியிட்டது. கடந்த கால அரசியல் வரலாற்றில் தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தான் மாறி மாறி தமிழகத்தில் ஆட்சி அமைத்து வருகிறது. எம்.ஜி.ஆரை தொடர்ந்து ஜெயலலிதா, அவரின் வழியில் தற்போது எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வழிநடத்த, திமுகவில் தற்போது கலைஞர் கருணாநிதியை தொடர்ந்து மு.க. ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவின் முக்கிய வேட்பாளர்கள் பட்டியல் :

*போடிநாயக்கனூர் தொகுதி – ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக) vs தங்க தமிழ்செல்வன்(திமுக)

*கொளத்தூர் தொகுதி – மு.க.ஸ்டாலின் (திமுக) vs ஆதிராஜாராம் (அதிமுக)

*சேப்பாக்கம் தொகுதி – உதயநிதி ஸ்டாலின் (திமுக) vs அதிமுக கூட்டணி வேட்பாளர் கசாலி (பாமக)

*ராயபுரம் தொகுதி – ஜெயக்குமார் (அதிமுக) vs மூர்த்தி (திமுக)

*கோபிசெட்டிபாளையம் தொகுதி – செங்கோட்டையன் (அதிமுக) vs மணிமாறன் (திமுக)

*ஜோலார்பேட்டை தொகுதி – கே.சி. வீரமணி (அதிமுக) vs தேவராஜ் (திமுக)

*சைதாப்பேட்டை தொகுதி – சுப்ரமணியன் (திமுக) vs சைதை துரைசாமி

*வேதாரண்யம் தொகுதி – ஓ.எஸ் மணியன் (அதிமுக) vs வேதரத்தினம் (திமுக)

Exit mobile version