சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும் அருமையாய்.. அதற்கு காத்திருங்கள் பொறுமையாய்… நடிகை கௌதமி பேட்டி

வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவிற்கு அருமையான வெற்றி கிடைக்கும் என்று நடிகை கௌதமி தெரிவித்துள்ளார்.

கோவை :

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்த நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மற்றும் கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தங்களது ஆதரவு கட்சிக்கு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அதிமுக – பா.ஜ.க குறித்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், கோவை மாவட்ட பா.ஜனதா சார்பில் இருசக்கர வாகன பேரணியில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான கௌதமி கலந்துகொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது ;

Read more – மார்ச் 11ல் மக்களை கவரும் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தகவல்

தேர்தல் பரப்புரையை தொடங்கி இருப்பது பொன்னான எதிர்காலத்திற்கான முதல் படியாக அமைந்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவிற்கு அருமையான வெற்றி கிடைக்கும் என்றார். மேலும், கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவதற்கு சிறிது நேரம் எடுக்கப்பட்டாலும் விரைவில் அதுதொடர்பான முடிவுகள் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version