டி.டி.வி தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி :
சசிகலா வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் மிக பெரிய மாற்றம் வரும் என்று மக்களால் எதிர்பார்க்க படுகிறது. மேலும், தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சி கூட்டணி குறித்த பேச்சுகளும் சூடுப்பிடிக்கிறது.
இந்தநிலையில் தொடர்ந்து 5 ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் பகுதிகளில் பரப்புரையை மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்தையும் அதிமுக அரசு நிச்சயம் ஏற்படுத்தி கொடுக்கும் என்று தெரிவித்தார்.
Read more – இன்றைய ராசிபலன் 11.02.2021!!!
அதனைத்தொடர்ந்து கிருஷ்ணகிரியில் பேசிய அவர், டி.டி.வி தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது. அடிப்படை உறுப்பினர்களில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அதிமுகவை பிரிப்பதற்காக சதி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் ஒருபோதும் அவர்களை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்றார்.
மேலும் அவர், ஒரு குடும்பத்தினர் அதிமுகவை ஆள்வதற்கு இனி முடியாது. அதிமுகவில் அடுத்த முதல்வராக வர அடிமட்ட தொண்டனால் மட்டுமே முடியும் என்று தெரிவித்தார்.