அதிமுகவில் இருந்து 3 அமைச்சர்கள் புறக்கணிப்பா ? வெளியான வேட்பாளர் பட்டியல்

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மீதமுள்ள 171 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை :

அதிமுக சார்பில் ஏற்கனவே கடந்த வாரம் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் முதல்வர், துணை முதல்வர் உள்பட 6 பேர் உள்ளடக்கிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று அதிமுக சார்பில் 171 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தற்போது அமைச்சர்களாக உள்ள நிலோபர் கபில், எஸ்.வளர்மதி, பாஸ்கரன் ஆகியோருக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, கே.வி. ராமலிங்கம், வைகை செல்வன் உள்பட 16 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Read more – மம்தா பானர்ஜி மீது நடத்திய தாக்குதல்… மருத்துவ குழு தீவிர கண்காணிப்பு…

மேலும், ராஜேந்திர பாலாஜி ஏற்கனவே போட்டியிட்டிருந்த சிவகாசி தொகுதியிலிருந்து தற்போது ராஜபாளையம் தொகுதிகளில் போட்டியிடுகிறார். மீதம் உள்ள முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் அவர்கள் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version