நான் முதல்வரானது சேலத்திற்கு தான் பெருமை… முதல்வர் எடப்பாடி சேலத்தில் பிரச்சாரம்…

சேலம் ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சித்ராவை ஆதரித்து வாழப்பாடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்தார்.

ஏற்காடு :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் ஆட்சியில் அமர தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், சேலம் ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சித்ராவை ஆதரித்து வாழப்பாடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்பொழுது அவர் கூறியதாவது ;

நான் முதல்வராக இருப்பது சேலத்திற்கு கிடைத்த பெருமை. நான் பல்வேறு பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறேன். எம்.ஜி.ஆர். என்னென்ன திட்டங்களை செயல்படுத்த நினைத்தாரோ அதை ஜெயலலிதா செய்து வந்தார். ஜெயலலிதா என்ன செய்ய நினைத்தாரோ அதை நான் செய்து வருகிறேன்.

ஆனால் தி.மு.க. கொள்ளையடிப்பது, ஊழல் செய்வதுதான் வேலை. இது தான் அவர்களது லட்சியம். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தான் தி.மு.க அரசு. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெரும்பான்மை தொகுதியில் வெற்றி பெற்று முதல்வராகி விடலாம் என்று பகல் கனவு காண்கிறார். அவரது பகல் கனவு ஒருபோதும் பலிக்காது என்று தெரிவித்தார்.

Read more – திமுகவின் சமத்துவம் எங்கே ? தேர்தல் பட்டியலில் வெறும் 12 பெண் வேட்பாளர்கள் மட்டுமே..

மேலும், நான் பொறுப்பேற்றதும் கடும் வறட்சி, புயல், கொரோனா என பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version