தந்தை கமலுக்காக சாலையில் வெறித்தனமாய் நடனமாடிய அக்சரா ஹாசன்.. வைரலாகும் வீடியோ…

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை ஆதரித்து நடிகைகள் அக்சரா ஹாசன் மற்றும் சுகாஷினி நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் நேற்று இரவு 7 மணியுடன் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டனர். கடைசி நாள் பிரச்சாரம் என்பதால் மக்களை கவர அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசமும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரடியாக போட்டியிடுகின்றனர். இதனால் யாரு வெற்றி பெறுவார்கள் என்று பொதுமக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை ஆர்வமாய் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Read more – சென்னையில் இருந்து வாக்களிக்க இதுவரை 4 லட்சம் பேர் பயணம்…

இந்தநிலையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் தந்தைக்கு ஆதரவாக நேற்று அக்சரா ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர், நடிகை சுகாஷினியுடன் நடனமாடி வாக்கு சேகரித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version