மக்கள் நீதி மய்ய கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அணைத்து கட்சிகளும் பிரச்சாரம் மற்றும் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், மக்கள் நீதி மய்யத்தில் கூட்டணி அமைத்துள்ள சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்த தொகுதி பங்கீட்டில் மக்கள் நீதி மய்ய பொது செயலாளர் சி.கே. குமரவேல் சமக தலைவர் சரத்குமார் மற்றும் ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் தொகுதி பங்கீட்டில் கலந்துகொண்டனர்.
Read more – இன்றைய ராசிபலன் 09.03.2021!!!
மேலும் இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த கூட்டணி குறித்த பெயரை விரைவில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பார் என்றும், தங்களது கூட்டணியில் மேலும் ஒரு சில கட்சிகள் இணைய வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.