நான் ஆட்சியில் அமைத்தவுடன் குழந்தைக்கு தமிழில் பெயர் வைத்தால் ரூபாய் 5000 இருப்பு தொகை அளிக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளித்து பேசிய சீமான் கூறியதாவது;
நீங்கள் உண்ணும் உணவில் மைதாவிற்கு பதிலாக பனங்கிழங்கில் மாவு தயாரித்து சப்பாத்தி, களி தயாரித்து சாப்பிடுங்கள் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். நானும் எனது மகன் மாவீரனும் அவ்வாறே சாப்பிடுகிறோம். பிள்ளைகள் நம் நாட்டின் செல்வங்கள், ஒரு அரசியல் வாதி அடுத்த தேர்தலை மட்டுமே நினைப்பான். ஆனால் ஒரு நல்ல தலைவன் அடுத்த தலைமுறை பற்றியும் நினைப்பான். நான் ஆட்சியில் அமைத்தவுடன் குழந்தைக்கு தமிழில் பெயர் வைத்தால் ரூபாய் 5000 இருப்பு தொகை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
Read more – ஆதார் அட்டை இருந்தால் சேப்பாக்கம் தொகுதியில் ரூபாய் 500.. வெளியான அதிமுகவிற்கு எதிரான வீடியோ ஆதாரம்…
மேலும், இத்தனை ஆண்டுகளாக திராவிட ஆட்சியாளர்களால் அதிகாரம் மறுக்கப்பட்ட ஆதித்தமிழர் குடிமக்களுக்கு அதிக அளவிலான பொதுத் தொகுதிகளில் போட்டியிட நாம் தமிழர் கட்சி இடமளித்துள்ளது. காங்கிரஸ், பாஜக என மத்தியில் கட்சிகள்தான் 2. ஆனால் கொள்கைகள் ஒன்றே. பண மதிப்பிழைப்பை தவிர்த்து சிஐஏ, என்.ஆர் சி, என்.ஐ.ஏ, ஜிஎஸ்டி, நீட் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டு வந்த காங்கிரஸ், அவற்றை செயல்படுத்தியது பாஜக தான் என்றார். தொடர்ந்து, காங்கிரஸ் ஓர் கதர் அணியாத பாஜக, பாஜக ஒரு காவி அணியாத காங்கிரஸ் என்று தெரிவித்த அவர், நான் இருக்கும் வரை இந்த இரண்டு கட்சிகளும் தமிழகத்திற்குள் வரவிடமாட்டேன் என்றும் தெரிவித்தார்.