திமுக, அதிமுக மற்றும் அமமுக இடையே நடைபெறும் யுத்தம் தான் இந்த சட்டமன்ற தேர்தல் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
இந்தநிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விழுப்புரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் கூறியதாவது; திமுக, அதிமுக போன்ற கட்சிகளை தாக்கி பேச அமமுகவிற்கு மட்டும் தான் அந்த உரிமையும், தகுதியும் உள்ளது. திமுக, அதிமுக மற்றும் அமமுக இடையே நடைபெறும் யுத்தம் தான் இந்த சட்டமன்ற தேர்தல் என்று தெரிவித்துள்ளது.
மேலும், அமமுக கட்சி ஆட்சிக்கு வந்தால் நகை தொழிலாளர்களுக்கு விழுப்புரத்தில் நகை தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்றும் தமிழகத்தில் நேர்மையான ஆட்சியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவும் என்றும் தெரிவித்துள்ளார்.