அமமுக சார்பில் மார்ச் 8,9 ம் தேதி நேர்காணல் – டிடிவி தினகரன் அறிவிப்பு

அம‌முக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு வரும் 8, 9ம் தேதிகளில் நேர்காணல் நடத்தப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மற்றும் கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், அமமுக சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில்,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தலைமை கழகத்தில் கடந்த 3 ம் தேதிமுதல் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Read more – மக்கள் நீதி மய்யம் அமைக்கும் ஆட்சி, தொடரும் பிற கட்சிகளின் வீழ்ச்சி.. இதுவே காலத்தின் கட்டாயம்… கமல்ஹாசன் உறுதி

சட்டமன்ற தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ள காரணத்தினால் கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோருபவர்கள் வருகிற 7 ம் தேதி வரை மட்டுமே விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும் என்றும் அன்று மாலை 5 மணிக்குள் கழகத்தில் விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், விருப்ப மனு வழங்கியவர்களுக்கான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் வருகிற 8 மற்றும் 9 ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version