அரசியலை விரட்டிய சசிகலா, துடித்துப்போன டிடிவி..அமமுக நிலைமை என்ன ?

சசிகலா வெளியிட்ட அறிவிப்பால் டிடிவி தினகரன் இரவு தனது ஆதரவாளர்களை அழைத்து அமமுக நிலைமை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை :

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்த நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மற்றும் கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடந்த மாதம் சசிகலா விடுதலை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று இரவு தீடிரென சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டார். அதில், நான் என்றும் பதவிக்காகவும், பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் நன்றியுடன் இருப்பேன். ஜெயலலிதா ஆட்சி தொடர உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். நம்முடைய ஒரே எதிரி தீய சக்தியான திமுகவை ஆட்சியில் அமர செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.

Read more – இன்றைய ராசிபலன் 04.03.2021!!!

இந்த செய்திகேட்டு டிடிவி தினகரன் இரவு முழுவதும் தூங்கமுடியாமல் தவித்துள்ளார். மேலும், தனது ஆதரவாளர்களை வரவைத்து அமமுக நிலைமை குறித்து ஆலோசனையும், யாருடன் கூட்டணி வைக்கலாம் என்றும் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version