கடையில் கல் வீசியது சிறு சம்பவம்.. அதை ஊதி எங்களை வம்பிழுக்க வேண்டாம்.. வானதி ஸ்ரீனிவாசன் பதில்

கோவையில் பிரச்சாரத்தின்போது கடியில் கல் வீசியது சிறு சம்பவம் அதை ஊதி பெரிதாக்க வேண்டாம் என்று பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் கோவை டவுன்ஹாலில் வானதி ஸ்ரீனிவாசனிற்கு ஆதரவாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்பொழுது அப்பகுதியில் உள்ள கடைகளை பாஜக தொண்டர்கள் அடைக்க கூறி மிரட்டியதாகவும், அவ்வாறு அடைக்காத கடைகள் மீது கற்களை வீசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிரிது அந்த பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதில் ஒரு செருப்பு கடை மிகுந்த சேதம் அடைந்தநிலையில், அந்த கடைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

Read more – சிங்காரமாக இருந்த சென்னை, அதிமுக ஆட்சியில் சீரழிந்து போய்விட்டது… முக ஸ்டாலின் முதல்வருக்கு பதில்

இதுகுறித்து விளக்கமளித்த கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் கூறியதாவது, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகையின் போது நடந்த பேரணியில் தவறு எங்கே நடந்தது என விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், செருப்புக்கடையில் கல் வீசப்பட்டது சிறு சம்பவம் அதை ஊதி பெரிதாக்கி வம்பிழுக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.

Exit mobile version