கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் உறுதியாக பா.ஜனதா தான் வெல்லும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
பல்லடம் :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், திருப்பூர் பல்லடத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எல். முருகன் கூறியதாவது;
விவசாயிகளுக்கு உண்மையிலேயே நல்லது செய்து நண்பனாக இருப்பது பா.ஜனதா கட்சிதான். தமிழகத்தில் மட்டும் 45 லட்சம் விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின் மூலம் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் மட்டும் அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளனர்.
Read more – ஹெலிகாப்டரில் பறந்து வந்து கமல் காட்டிய கெத்து… மக்கள் யாரும் இல்லாததால் பிரச்சாரக் கூட்டம் ரத்து..
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் உறுதியாக பா.ஜனதா தான் வெல்லும். கமல்ஹாசனை பார்க்கத்தான் மக்கள் வருவார்கள். வாக்களிக்க அல்ல என்று தெரிவித்த அவர், வருமான வரித்துறை சோதனைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. தி.மு.க.வின் பொய் பிரசாரங்களை முறியடித்து, எங்களது கூட்டணி வெற்றி பெற செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.