கொள்கை ரீதியாக மோதுங்கள்… தனிநபர் தாக்குதல் வேண்டாம்.. திமுகவிற்கு எச். ராஜா அட்வைஸ்

தனிநபர் தாக்குதல் வேண்டாம், கொள்கை ரீதியாக மோதுங்கள் என்று பாஜக மூத்த தலைவரும், காரைக்குடி வேட்பாளருமான எச். ராஜா தெரிவித்துள்ளார்.

காரைக்குடி :

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்தநிலையில், பாஜக மூத்த தலைவரும், காரைக்குடி வேட்பாளருமான எச். ராஜா பாஜகவின் கூடுதல் துணை தேர்தல் அறிக்கை வெளியிட்டு பேசியதாவது ; திமுகவினர் முதல்வரை மட்டும் காயப்படுத்தவில்லை. ஒட்டுமொத்த பெண்கள் இனத்தையும் இழிவாக பேசியுள்ளார். ஸ்டாலின் பெண்மையை மதிப்பவராக இருந்தால் உடனடியாக ஆ. ராசாவை நீக்கி இருக்க வேண்டும் என்றார்.

Read more – 2 ஏக்கர் நிலம் எங்கே ? செல்போன் எங்கே ? திமுக, அதிமுக கட்சிகளின் வாக்குறுதி இதுவே… விருதுநகரில் ராதிகா பிரச்சாரம்..

அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை நேரடியாக விமர்சனம் செய்ய தெரியாமல், இது போன்று இழிவான விமர்சனம் செய்து வருகின்றனர். எங்கள் கூட்டணி கட்சி அரசியலில் கருத்தியல் ரீதியாக மோத தயார். நான் எப்பொழுது சிந்தாத ரீதியாக திக, திமுக கட்சிகளை விமர்சனம் செய்பவன், ஆனால் தனி நபர் பற்றி பேசுபவன் நானில்லை என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version