குஷ்பூ மற்றும் கௌதமி எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காத நிலையில் இதுகுறித்து இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை :
வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் தமிழக பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
அந்த வேட்பாளர் பட்டியலில் திருவல்லிக்கேணி -சேப்பாக்கம் தொகுதியில் குஷ்பூ களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு வழங்கப்பட்டது. அதேபோல் கௌதமி ராஜபாளையத்தில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவை செய்துள்ளார். அதில், ஒரு உண்மையான தொண்டனாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்கு நான் தரை மட்டத்தில் கடுமையாக உழைத்து வருகிறேன். அந்தத் தொகுதி மக்கள் என் மீது பொழிந்த அன்பு, பாசம் மற்றும் மரியாதை உண்மையானது தூய்மையானது.
Read more – தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாது… வழக்கம் போல் வாய்விட்ட சுப்பிரமணிய சுவாமி…
நான் எப்போதுமே அவர்களுக்கு கடன்பட்டிருப்பேன். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் மகிழ்ச்சியைச் சேர்ப்பதற்கும் எனது கடமையை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன். என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல் நடிகை கௌதமி, ராஜபாளையம் தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக நினைத்து கடந்த 5 மாதமாக சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள்.உங்கள் அன்பின் வழி கிடைத்த உறவு என்றும் நிலைத்திருக்கும், நீங்கள் உயர்வான வாழ்க்கையை அடைய பாடுபடுவேன் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.