தமிழகத்தில் ஏப்ரல் 6 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

சென்னை :

தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மிகப்பெரிய ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் தேர்தல் என்பதால் தேர்தல் களம் தொடர்ந்து சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:

தமிழகத்தில் தொகுதிக்கு 30.8 லட்சம் ரூபாய் வரை வேட்பாளர்கள் செலவு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியில் 22 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழகத்தில் தேர்தல் பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் செலவின பார்வையாளர்களாக மதுமாதன், பாலகிருஷ்ணன் என 2 பேரை நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

Read more – ஜனநாயகத்தின் வெட்கம்…. இதற்கு குடியரசு என்று பெயரா ? கமல் கேள்வி

தமிழகம் மற்றும் புதுச்சேரியை தொடர்ந்து கேரளாவிலும் ஏப்ரல் 6 ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், அசாமில் மார்ச் 27ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்த அவர், மே 2 ம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version