தமிழகத்தில் வாக்காளர் சீட்டு விரைவில் வழங்கப்படும் – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் சீட்டு விரைவில் வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மற்றும் கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது.

சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேசுகையில், தமிழகத்தில் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு விரைவில் வழங்கப்படும் என்றார்.

Read more – தமிழகத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் – பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கடிதம்

மேலும், அந்த வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குப்பதிவு நாள், வாக்குப்பதிவு நேரம் மற்றும் வாக்குச்சாவடி மையம் ஆகியவை இடம்பெற்றிருக்கும் என்றும், வாக்காளரின் புகைப்படம் இடம்பெறாது என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version