திட்டமிட்டபடி மே 2 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் : தலைமை தேர்தல் அதிகாரி

கொரோனா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு காரணமாக வாக்கு எண்ணிக்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி வரும் மே 2 ம் தேதி 75 மையங்களில் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கடந்த சில வாரங்களாவே தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதனால் கொரோனவை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மேலும் சில விதிமுறைகளும் விதிக்கப்பட்டது.

Read more – மக்கள் நீதி மய்யத்தில் இருந்து கமீலா நாசர் விலகியது ஏன் ? வெளியான பரபரப்பு தகவல்..

இந்தநிலையில், நேற்று கொரோனா பாதிப்பு காரணமாக வாக்கு எண்ணிக்கையை எப்படி சுமுகமாக நடத்துவது என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு காரணமாக வாக்கு எண்ணிக்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், மே 2-ந் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தை பொறுத்தமட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள் விசாலமான பரப்பளவை கொண்டவையாக ஏற்படுத்தப்பட்டு, கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க 6 அடி இடைவெளியுடன் அமைத்து தரப்படும் என்று தெரிவித்தார்.

Exit mobile version