தி.மு.க.விற்கு எடுத்து தான் பழக்கம், என்றும் கொடுத்து பழக்கம் இல்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தி.மு.க.விற்கு எடுத்து தான் பழக்கம் என்றுமே கொடுத்து பழக்கமே இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் :

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் பல்வேறு மாவட்டங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இராமநாதபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருவாடானை சட்டசபை தொகுதியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் சந்தித்து பேசியதாவது :

2016 ல் சட்டசபை தேர்தலின் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களினால் 3 லட்சம் உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.மேலும், தமிழகத்தில் 11 லட்சத்து 35 ஆயிரத்து 600 மகளிர் சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. அதற்கு வங்கி இணைப்புக் கடனாக இதுவரை சுமார் ரூ.42 ஆயிரத்து 785 கோடி வழங்கப்பட்டுள்ளது. எங்களுடைய அரசு கடந்த உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50 % இடஒதுக்கீடு அதிமுக அரசு வழங்கியுள்ளது என்றார்.

Read more – இன்றைய ராசிபலன் 03.01.2021!!!

அதனைத்தொடர்ந்து, தை பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு ரூபாய்.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. வரும் 4 ம் தேதி (திங்கட்கிழமை) முதல் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். கொரோனா காலத்தில் அதிமுக அரசு 8 மாத காலமாக இலவச அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை போன்றவற்றை வழங்கி அனைத்து குடும்பத்திற்கும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கினோம். ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் காவேரி குண்டாறு திட்டத்தில் இராமநாதபுரத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகளில் நீர் நிரப்பப்பட்டு விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version