தரையில் ஊர்ந்து சென்று ஆட்சி பிடிக்க நான் என்ன பாம்பா ? பல்லியா ? முதல்வர் ஆவேசம்

தரையில் ஊர்ந்து சென்று ஆட்சி பிடிக்க நான் என்ன பாம்பா, பல்லியா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடலூர் :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து நீங்கள் முதல்வர் பதவியை ஊர்ந்து சென்று தான் அடைந்தீர்கள் என்று எங்களுக்கு தெரியாத என்று கேள்வி எழுப்பினார். மேலும், நிர்வாகம் குறித்து என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா என்று சவால் விடுத்தார்.

இதுகுறித்து, கடலூரில் அதிமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி கூறியதாவது; நான் ஊர்த்து போய் முதல்வராக பல்லியா? பாம்பா? நான் நடந்து சென்றுதான் முதல்வரானேன். விவசாயிகள் படும் கஷ்டம் எனக்கு நன்கு தெரியும். வெயில், மழை, இரவு, பகல் என எதையும் பார்க்காமல் ரத்தம் வியர்வை சிந்தி உழைக்கும் ஒரே தொழில் விவசாயம். இதைப்பற்றி ஸ்டாலினுக்கு சிந்திக்க தெரியாது. சிந்தித்தாலும் பேசத் தெரியாது. என் தாத்தா காலத்தில் இருந்து விவசாயம் தான் செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

மேலும், எடப்பாடி விவசாயி, விவசாயி என குதிக்கிறார் என ஸ்டாலின் சொல்லுகிறார். நான் குதித்தால் உனக்கு என்ன?” என கேள்வி எழுப்பி பிரச்சார கூட்டத்தை முதல்வர் அதிரச்செய்தார்.

Exit mobile version