பழனியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பழனி :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.

இந்தநிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் பழனி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் கூறியதாவது : தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும், திமுக கட்சி நேரத்திற்கு ஏற்ப செயல்படும் கட்சி. கடவுளே இல்லை என கூறி வந்தவர்கள் தற்போது உங்களின் ஓட்டுக்காக வேல் பிடித்து பகல் வேஷம் போடுகிறார்கள் என்று தெரிவித்தார்.

Exit mobile version