எளிய மக்கள் யாரும் தி.மு.க.வில் பதவி வகிக்க முடியாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

எளிய மக்கள் யாரும் தி.மு.க.வில் எந்த காலத்திலும் பதவி வகிக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை:

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் பல்வேறு மாவட்டங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரையில் பிரச்சாரத்தில் மக்களை சந்தித்து பேசியதாவது :

தமிழகத்தில் மக்களுக்காக அனைத்து திட்டங்களையும் அதிமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதிமுக அரசு மக்களுக்கான அரசு, ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் என்ற இரு பெரும் ஆளுமைகளின் வழியில் மக்களுக்கு நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். வருகின்ற சட்டசபை தேர்தலில் அதிமுக விற்கு உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள் என்றார்.

Read more – சீனாவில் உள்ள இந்திய மாலுமிகள் 39 பேருக்கு அவரச சிகிச்சை அளிக்க அனுமதி வேண்டும் : சீனாவிடம் இந்தியா வேண்டுகோள்

மேலும், அதிமுக அரசு தைப்பொங்கலுக்கு வழங்கிடும் ரூபாய். 2,500 மற்றும் பரிசு தொகுப்புகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது? ஏழைகளுக்கு கொடுப்பது தவறா? திமுக ஆட்சியில் தான் ஏழை எளிய மக்களுக்கு எதுவும் செய்யமாட்டார்கள். அதிமுக அரசும் செய்ய கூடாதா என்ன ?

திமுகவில் எந்த காலத்திலும் எளிய மக்கள் யாரும் எந்த பதவிக்கும் வரமுடியாது. அங்கு வாரிசு அரசியல் மட்டுமே தலைவிரித்து ஆடுகிறது. முதலில் கருணாநிதி,அதன்பிறகு ஸ்டாலின், இப்பொழுது உதயநிதியும் வந்துவிட்டார், அடுத்ததாக ஸ்டாலினுடைய பேரன் ரெடியாகிவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version