மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான போராட்ட வழக்குகள் மற்றும் கொரோனா ஊரடங்கு காலத்தில் மீறியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தென்காசி :
தென்காசி மாவட்டத்தை அடுத்த கடையநல்லூரில் முதல்வர் பழனிசாமி சட்டமன்ற தேர்தலுக்காக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்பொழுது பேசிய அவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது, ஊரடங்கை மீறி பொது இடங்களில் சுற்றியது, கொரோனா பரவலின் போது அவதூறு பரப்பியது போன்ற அடிப்படையில் சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தற்போது இதற்காக போடப்பட்ட வழக்குகள் பொதுமக்களின் நலன் கருதி திரும்ப பெறுவதாக தெரிவித்தார்.
Read more – மறைந்த காங்கிரஸ் நிர்வாகியின் உடலை சுமந்த ராகுல் காந்தி..
மேலும், அதேபோல் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதையடுத்து மாநிலத்தில் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 1500 வழக்குகள் கைவிடப்படுவதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்டதற்காகவும், பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்காக இந்த வழக்குகள் போடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.