மக்கள் நீதி மய்யத்தின் மற்றொரு தொகுதி வேட்பாளருக்கும் கொரோனா தொற்று… அதிர்ச்சியில் தொண்டர்கள்…

மக்கள் நீதி மய்ய அண்ணா நகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், மக்கள் நீதி மய்யத்தின் சென்னை அண்ணா நகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read more – என்னை வெற்றி பெற செய்தால் விருத்தாசலத்தை தனிமாவட்டமாக மாற்றுவேன் : பிரேமலதா விஜயகாந்த் வாக்குறுதி

பொன்ராஜ் கடந்த நான்கு நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடன் நேற்று வரை உடன் இருந்த மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, கடந்த வாரம் மக்கள் நீதி மய்யத்தின் வேளச்சேரி தொகுதி வேட்பாளர் சந்தோஷ் பாபு ஐஏஎஸ் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version