கடலூர் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை :
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களத்தை விட தற்போது கொரோனா தொற்றின் ஆதிக்கம் வேகமெடுக்கிறது. இன்னும் ஒரு வாரமே தேர்தலுக்கு இருப்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், பிரச்சாரம் மேற்கொள்ளும் வேட்பாளர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே, மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களான வேளச்சேரி தொகுதி வேட்பாளர் சந்தோஷ்பாபு, அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், தேமுதிகவை சேர்ந்த சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ், சோழிங்கநல்லூர் தி.மு.க. வேட்பாளர் அரவிந்த் ரமேஷ், காரைக்கால் அதிமுக வேட்பாளர் அசனா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
Read more – கருணாநிதியே ஸ்டாலினை நம்பாதபோது, பொதுமக்களாகிய நீங்கள் எப்படி நம்புவீர்கள் : முதல்வர் பழனிசாமி
இதையடுத்து, தற்போது கடலூர் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனைத்து வேட்பாளர்களும் நேரடியாக சென்று மக்களை சந்தித்து வரும் வேளையில் கொரோனா தொற்றானது அடுத்தடுத்து வேட்பாளர்களுக்கு பரவுவதால் பொதுமக்களின்றி தொண்டர்களும் அச்சத்தில் உள்ளனர்.