தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை :
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்த நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேமுதிகவுடன் நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து 15 கொடுக்கப்பட்டதாகவும் அதற்கு தேமுதிக மறுப்பு தெரிவித்து கூட்டணியை ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், தேமுதிக மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்து வருகிறது.
Read more – மாத்தி சொல்லாதீங்க ராஜா … நானே பேசிக்குறேன்… ஹெச். ராஜாவை மேடையில் கலாய்த்த அமித்ஷா
இந்நிலையில், “நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு” எனத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எல்.கே.சுதீஷ் பதிவு செய்துள்ளது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இன்று 4 ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அதிமுக கட்சி தேமுதிகவை அழைத்துவரும் வேளையில். சுதீஷின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதேபோல் விஜயகாந்தின் மகன் பிரபாகரன் 234 தொகுதியிலும் தனியாக நின்று ஜெயிப்போம் என்று கூறியதை தொடர்ந்து இவரும் இதையே கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.