விருத்தாசலம் மக்கள் எங்கள் உயிரானவர்கள் நிச்சயம் வெற்றியை தருவார்கள் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விருத்தாசலம் :
வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி தேர்தல் என்பதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் பிற கட்சிகளை குறை கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மனுதாக்கல் செய்தார். அதன்பிறகு, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
2006 ல் விஜயகாந்த் வெற்றிபெற்ற இந்தத் தொகுதியில், 2021ல் நான் போட்டியிடுகிறேன். கேப்டனுக்கும், தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத்திற்கும் முதல் வெற்றியைத் தந்தது விருத்தாசலம் தொகுதி. அன்றிலிருந்து விருத்தாசலம் தொகுதி மக்களின் உயிரோடு, உணர்வோடு கலந்தது தான் தேமுதிக கட்சி என்று தெரிவித்தார்.
Read more – அதிமுக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் தமிழகம் பாழாய் போய்விட்டது – மு.க.ஸ்டாலின் அதிரடி
2006 ல் விஜயகாந்த் அத்தனை நல்ல திட்டங்களையும் விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு செய்துள்ளார். அதன்பிறகு, 2011 ல் எங்கள் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளருக்கு வெற்றியைத் தந்தார்கள். அதுபோல் என்னையும் நிச்சயம் அப்பகுதி மக்கள் வெற்றிபெற செய்வார்கள். 16 ஆண்டு காலம், நான் தேர்தல் பிரச்சாரத்தை மட்டும் மேற்கொண்டு வந்தேன். முதல்முறையாக வேட்பாளராக நான் விருத்தாசலத்தில் போட்டியிடுகிறேன். மீதம் உள்ள 59 தொகுதிகளில் என்னால் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாது. ஆகையால் எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் மட்டும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தலைவர் விஜயகாந்த் ஈடுபடுவார் என்று தெரிவித்தார்.