என் பேரு பொன்முடி.. ஊரு விழுப்புரம்.. தில் இருந்தா ஒத்தைக்கு ஒத்த வா.. முதல்வரை சவாலுக்கு அழைக்கும் பொன்முடி

ஊழல் வழக்கில் பெற்ற தடையை நீக்கினால் எங்கு வேண்டுமானாலும் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்று திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி முதல்வருக்கு சவால் விடுத்துள்ளார்.

விழுப்புரம் :

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து 5 ம் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அண்மையில், முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது மு.க. ஸ்டாலினுடான விவாதத்திற்கு நான் தயார், ஆனால் அவர் தான் என்னுடன் விவாதிக்க மறுத்து வருகிறார் என்று தெரிவித்தார். இந்தநிலையில், திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது : விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்திற்கே சென்று தடை வாங்கிய முதல்வர் பழனிசாமி, பெங்களூரில் இருந்து சசிகலா வருகையால் மனக்குழப்பம் ஏற்பட்டு இருக்கிறார்.

Read more – முன்ஜென்ம உறவு ஞாபகம் வந்தாலும் இந்த ஜென்மத்தில் முதல்வர், சசிகலா சந்திப்பு நடக்காது – அமைச்சர் ஜெயக்குமார்

முதல்வர் பிரச்சார கூட்டத்தில் , பச்சை துண்டை கழுத்தில் போட்டுகொண்டு கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார். மு.க.ஸ்டாலினை விவாதத்திற்கு அழைக்கும் அவர் , முதலில் ஊழல் வழக்கில் ஓடோடிச் சென்று பெற்ற தடை உத்தரவை விலக்கிக் கொண்டு வாருங்கள், அதன் பிறகு நேருக்கு நேர் விவாதிப்போம் என்று பொன்முடி தெரிவித்துள்ளார்.

Exit mobile version