அதிமுகவை காக்கா பிடித்து தமிழகத்தை கரம் பிடிக்க நினைக்கிறது பா.ஜ.க – மதுரையில் மு.க. ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் அதிமுகவை பயன்படுத்தி பா.ஜ.க காலூன்ற பார்க்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மதுரை :

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை வண்டியூரில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசு சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதார தாக்குதல் நடத்துகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுதான் மோடி அரசு மக்களுக்கு தரும் பரிசு என தெரிவித்தார்.

தொழிலாளர்களின் தோழனாகவும், பாட்டாளிகளின் பாதுகாவலானாகவும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் பேச வாய்ப்பளித்தமைக்கு உங்களுக்கு நன்றி என்று தெரிவித்த அவர், அதிமுக மூலம் பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. தனது ஊழலை மறைக்க அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது என்றும், பெட்ரோல் விலை உயர்வால் காய்கறி, போக்குவரத்து கட்டணம் என அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்கிறது என்றும் தெரிவித்தார்.

Read more – பெரும்பான்மையை நிரூபிக்க போட்ட உத்தரவின் அம்சங்கள் என்ன ? தமிழிசையின் தாரக மந்திரம்

மேலும், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

Exit mobile version